Windows 11 வெளியிடப்படும் திகதி | Microsoft இன் புதிய இயக்க முறைமை (OS) எப்போது வெளியிடப்படும்
Microsoft Windows இன் புதிய இயக்க முறைமையானது எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதி வெளியிடப்படும். Microsoft இன் முதல் பெரிய இயக்க முறைமையை புதுப்பித்து ஆறு வருடங்களை கடக்காத Windows பயணர்களுக்கு அக்டோபர் 5-ஆம் திகதி முதல் இலவசமாக கிடைக்கும். இருப்பினும் ஒவ்வொரு Windows சாதனத்திற்கும் இயக்க முறைமை (Operating system) ஒரே நேரத்தில் வெளிவராது. மேலும் ஏற்கனவே Windows நிறுவனத்தினால் எதிர்வு கூறப்பட்ட புதிய புதிய அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் மைக்ரோசொப்ட் (Microsoft) நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Windows 11 இன் முதல் பொது வெளியீடானது மிகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் (Streamlined), மெக் (Mac) போன்ற வடிவமைப்பை கூடியதாகவும், புதுப்பிக்கப்பட்ட தொடக்க மெனு (Start Menu), புதிய பல்பணி கருவிகள் (Multitasking Tools), ஒருங்கிணைந்த மைக்ரோசாஃப்ட் குழுக்கள் (interfreated Microsoft Teams) போன்ற அம்சங்களை உள்ளடக்கும். ஆனால் மிகவும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு கொண்டிருந்த AppStore ஆனது Android Mobile பயன்பாட்டாளர்களுக்காக ஆதரவினை வழங்காது. அத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அன்ரோயிட் (Android) பயன்பாட்டாளர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதற்கான திகதியை இன்னும் வழங்கவில்லை. எனினும் எதிர்வரும் காலங்களில் அதுதொடர்பான தகவல்கள் வெளிவரக்கூடும் என மைக்ரோசாஃப்ட் தமது இணைய பதிவில் தெரிவித்துள்ளது.
ஆனால் இங்கு பயனர்களிடம் விண்டோஸ் (Windows) க்கு இணக்கமான சாதனத்தினை வைத்திருப்பதனால் அந்த பயனருக்கு அக்டோபர் 5 முதல் windows 11 ஐ இயக்க முடியும் என அர்த்தமல்ல. Windows 11ஆனது முதலாவது புதிய தகுதியுள்ள சாதனங்களுக்கு (New eligible devices) மேம்படுத்தப்படும், மீதமுள்ள சாதனங்களுக்கு பயனர்களின் வன்பொருள் சாதனங்களை பொறுத்து அந்த சாதனத்தின் உற்பத்தி ஆண்டு போன்ற பிற காரணிகளையும் பொறுத்து அக்டோபர் மற்றும் 2022 இன் நடுப்பகுதியிலும் இலவசமாக மேம்படுத்தப்பட்டு windows பாவனையாளர்களின் பயன்பாட்டிற்கு இயக்க முறைமை (OS) விடப்படும்.
மேலும் Windows 11 ஆனது எப்போது பயனர்களின் பயன்பாட்டிற்காக கிடைக்கும் என்பதனை Windows Update இலிருந்து அறிவிப்புகள் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். மேலும் Windows Update இனை கைமுறையாக (Manually)சரி பார்க்கும் போதும் புதிய அறிவிப்புகள் (Updates) காண்பிக்கப்படும். இது தொடர்பாக எமது இந்த வலைத்தளத்திலும் அறிவிப்புகளை வெளியிட்ட காத்திருக்கின்றோம்.

GIPHY App Key not set. Please check settings