in

Poco smartphone exploded in the 5th minute connected to the charger!

சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடத்தில் வெடித்து சிதறிய போக்கோ ஸ்மார்ட்போன்!

போக்கோ நிறுவனத்தின் POCO X3 Pro ஸ்மார்ட்போன் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Qualcomm® Snapdragon™ processor ஐக் கொண்டிருக்கும் X3 Pro ஸ்மார்ட்போன் பிளாக்‌ஷிப் தர செயல்பாட்டை வழங்குகிறது.

சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கும் போக்கோ X3 ப்ரோ இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் விற்பனைக்கு வந்தது.போகோ X3 சாதனம் 6.67 இன்ச் கொள்ளளவுடைய தொடுதிரை (Touch Screen) மற்றும் 1080 x 2400 பிக்சல்கள் கொண்டுள்ளது.  போக்கோ X3 இயங்குதளமானது ஆண்ராய்டு 10 (Android 10) ஐக் கொண்டுள்ளது.6 GB LPDDR4X ரேம் (RAM), 64 GB சேமிப்புதிறன் மெமரி (Internal Storage) வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 256 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.  இந்த நிலையில், தனது போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜூன் 15-ம் திகதி வாங்கிய புதிய போக்கோ X3 ப்ரோ செப்டம்பர் 4-ம் தேதி வெடித்ததாக அவர் தெரிவித்தார். ஸ்மார்ட்போன் சார்ஜரில் இணைத்த 5-வது நிமிடம் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியதாக அவர் மேலும் தெரிவித்தார்.  இத்துடன் வெடித்த நி்லையில் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் அதனை வாங்கிய கட்டண பற்றுச்சீட்டு க்கள் உள்ளிட்டவைகளையும் அவர் இணையத்தில் வெளியிட்டார். ஸ்மார்ட்போன் வெடித்த சம்பவத்திற்கு போக்கோ தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

How To Make a Max30100 Pulse Oximeter Webserver Using Nodemcu esp8266 At Home//Covid 19 project

Apple Alert – Focus on iPhone Use! | I Phone