in

தொலைபேசி சந்தையை பிரமிக்க வரும் புதிய Oppo Smartphone : சில நிமிடங்களில் Full Charge

ஒப்போ நிறுவனமானது தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான பலதரப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது.

Oppo நிறுவனமானது விரைவிலேயே Oppo K9 Pro எனம் தொலைபேசியை விரைவாக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஒரு 5G தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் ஆகும். இது பலதரப்பட்ட அற்புதமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா (Camera) முதல் டிஸ்ப்ளே (Display) வரை அனைத்து அம்சங்களும் அற்புதமாகவே உள்ளன.

ஓப்போவின் (Oppo) இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் தேதி அதாவது இன்றைய தினம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அம்சங்கள் சீனாவில் ஒப்போவின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே இப்படி இருக்கும்:

ஓப்போ நிறுவனம், Oppo K9 Pro-வின் முக்கிய அம்சங்களை சீன சமூக வலைத்தளமான Weibo-வில் உறுதி செய்துள்ளது. இந்த போன் 6.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக, இதில் பயனருக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே, 90fps சப்போர்ட் மற்றும் HDR 10 சப்போர்ட் ஆகியவை கிடைக்கும்.

பேட்டரி அம்சங்கள்

பேட்டரியைப் பற்றி பேசுகையில், இந்த ஒப்போ ஸ்மார்ட்போன் (Smartphone) 4,500mAh பேட்டரி மற்றும் 60W சூப்பர் ஃப்ளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும். பேட்டரியில் ஒரு புதிய சிறப்பம்சமாக, இந்த முறை நிறுவனம் ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. தொலைபேசி வெறும் 16 நிமிடங்களில் 0 முதல் 50% வரை சார்ஜ் ஆகும்.

உங்கள் தொலைபேசியை (Mobile Phone) இரவு முழுவதும் சார்ஜ் செய்தாலும், அது ஓவர் ஹீட் ஆகாது, அதன் பேட்டரியும் மோசமடையாது. ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போன் ஐந்து கோர் பாதுகாப்புடன் வருகிறது.

தொழில்நுட்ப அம்சங்கள் சுருக்கமாக

What do you think?

Written by Rifdhy Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

Do you want to upgrade to iPhone 13? Here we will compare iPhone 13 with iPhone 12, 11, XS, X, 8 and 7. Don’t miss! | In Tamil

மலிவு விலையில் OPPO வின் புதிய ஸ்மார்ட் போன்! | OPPO’s new smartphone At an affordable price