in

Nokia’s 5G smartphone at an affordable price | Nokia G50 |In Tamil

மலிவு விலையில் நோக்கியாவின் 5 G ஸ்மார்ட்போன்

 தொழில்நுட்ப ரீதியாக நாம் தொடர்ந்து முன்னேறி வருகிறோம். சாதாரண குரல் அழைப்பிலிருந்து இணையத்திற்கு மாறினோம். பின்னர் 2 ஜி, 3 ஜி, 4 ஜி மற்றும் இப்போது 5 ஜி என முன்னேறி வருகிறோம். தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சியை, ஸ்மார்ட்போன் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் செயல்முறையில் பல மாற்றங்களை செய்து வருகின்றன.

அந்த நிறுவனங்களில் நோக்கியாவும் (Nokia) ஒன்று. உலகின் பழமையான தொலைபேசி தயாரிப்பாளர்களில் ஒருவரான நோக்கியாவும் காலத்திற்கேற்ப தனது தயாரிப்புகளை மாற்றவும் மாற்றியமைக்கவும் முயற்சித்து வருகிறது. இப்போது 5G யுகத்தில், Nokia தனது மலிவான 5G ஸ்மார்ட்போனை கொண்டு வரக்கூடும் என கூறப்படுகின்றது. விரைவில், Nokia வின் புதிய 5G ஸ்மார்ட்போன் ஆன Nokia G50 ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக Nokia நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியாவின் இந்த 5G ஸ்மார்ட்போனுக்கு (Smartphone) TENAA வின் சான்றிதழ் கிடைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.Nokia G50 இன் தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு,

இந்த போனின் Rear Camera 48MP ஆகவும் Front Camera 8MP ஆகவும் இருக்கக்கூடும். அத்துடன் இது Android 11 OSஐக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனை Qualcomm Snapdragon 480 SoC மூலம் இயக்க முடியும். இது 5 ஜி சிப்செட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நோக்கியாவின் (Nokia) மிக மலிவான 5G ஸ்மார்ட்போனாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

1.80GHz என்ற பேஸ் ஃப்ரீக்வென்சியுடன் (pace frequency), இந்த போன் 4GB RAM மற்றும் 64 GB Storage உடன் வரக்கூடும். செய்திகளின் படி, வாடிக்கையாளர்கள் இதில் மைக்ரோ எஸ்டி (Micro SD) கார்டின் வசதியை பெறமாட்டார்கள். இந்த Mobile Phone TENAA வின் 2GB, 4GB, 6GB மற்றும் 8GB என 4 வகைகளிலும் காணப்படும். இதில் 64 GB, 128 GB, 256 GB மற்றும் 512 GB என நான்கு ஸ்டோரேஜ் (Storage) வகைகள் இருக்கும்.

What do you think?

Written by Rifdhy Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

iPhone 13 Mini |Apple’s last smaller-sized premium iPhone | In Tamil

How To Make a Max30100 Pulse Oximeter Webserver Using Nodemcu esp8266 At Home//Covid 19 project