in

Do you want to upgrade to iPhone 13? Here we will compare iPhone 13 with iPhone 12, 11, XS, X, 8 and 7. Don’t miss! | In Tamil

நீங்கள் iPhone 13 க்கு மேம்படுத்த வேண்டுமா?இதோ நாம் iPhone 13 ஐ iPhone 12, 11, XS, X, 8 மற்றும் 7 உடன் ஒப்பிடுவோம்.படிக்க தவறாதீர்கள்!

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் ஐபோன் 13இன் வகைகளை அறிவித்தது. 699 டாலருக்கு iPhone 13 mini , 799 டாலருக்கு iPhone 13, 999 டாலருக்கு iPhone 13 pro மற்றும் 1049 டாலருக்கு iPhone 13 pro max ஆகியவற்றை வெளியிட்டது. ஆப்பிளின் முன்கூட்டிய ஆர்டர்கள் வெள்ளிக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. செப்டம்பர் 24ஆம் திகதி முதல் அவை ஆர்டர் செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

iPhone 13 வெளியிடப்பட்டதை தொடர்ந்து ஆப்பிள் தொலைபேசி பாவனையாளர்கள் ஒரு பெரிய கேள்வியினை எதிர்நோக்குகின்றனர். அதாவது, நான் எனது ஆப்பிள் தொலைபேசியை புதிய ஆப்பிள் தொலைபேசிக்கு மாற்றீடு செய்ய வேண்டுமா? என எண்ணுகின்றனர். இதற்கு எளிதாக பதிலை வழங்க முடியாது. புதிய வடிவமைப்பே வாங்குவதற்கான முடிவுகள் எப்போதும் பட்ஜெட்டை பொறுத்து வேறுபடும், ஒருவரின் தொலைபேசியின் தற்போதைய வினைத்திறன் மற்றும் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து வேறுபடும்.

ஐபோன் 13 ஐ நாங்கள் இன்னும் பரிசோதிக்க வில்லை என்றாலும் நமக்கு தெரிந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐபோன் 13 க்கு முன்னுரிமை அளிப்பதற்கு முன் சில முடிவுகளை எடுக்க முடியும்.

குறுகிய பதில் என்னவென்றால் பெரும்பாலான ஐபோன் 12 , ஐபோன் 11 பாவனையாளர்கள் இந்த ஐபோன் 13 க்கு மாறுவதை தவிர்க்கலாம். ஏனெனில் அவர்களின் தொலைபேசி இன்னும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களையும் வடிவத்தையும் கொண்டிருக்கின்றது. மேலும் இவை ஒருசில ஐ-போன் 13 இன் பாவனை அனுபவத்தையும் கொண்டிருக்கின்றது.

ஆனால் பழைய ஐபோன் மாடல்கள் வைத்திருப்பவர்களுக்கு குறிப்பாக, iPhone X மற்றும் அதற்கு முந்திய மடல்கள் வைத்திருப்பவர்கள் iPhone 13க்கு மாறுவது சிறந்தது. ஏனெனில் இவ்வாறான பழைய ஐபோன்களில் கேமரா(Camera), பேட்டரியின் கொள்ளளவு (Battery capacity) என்பன போதியளவான திறன் கொண்டவை அல்ல. மேலும் iPhone 6s களுக்கு முன்னைய ஐபோன்களுக்கு Update ஆனது செப்டம்பர் 20 முதல் வழங்கப்பட்டு இருப்பினும் அது சமீபத்தில் வெளிவந்த ஐபோன் மாடல்களின் வேகத்தையும் செயல்திறனையும் ஒத்திருக்காது.

நாம் பயன்படுத்தும் ஐபோன் வகைகளின் அடிப்படையில் ஐபோன் 13 உடன் சற்று ஒருமித்து பார்ப்போம்.

iPhone 13 vs. iPhone 12, 12 Pro

நீங்கள் iPhone 12 பாவனையாளர் ஆக இருந்தால் ஐபோன் 12ஐ ஐபோன் 13 உடன் ஒப்பிடுகையில் இரு வகைகளிலும் ஒரே மாதிரியான ஒரே அளவான OLED 6.1-inch திரையும், 5G வசதி, வேகமான செயலி (fast processor), அசாதாரண கேமராக்கள் (Extordinary cameras) , magsafe இன் ஆதரவு என்பன ஒரே மாதிரியாகவே காணப்படுகின்றது. ஆனால் iPhone 13 ஐ பொறுத்த வரையில் ஐபோன் 12 விட பேட்டரியின் நீண்ட ஆயுட்காலமும், கேமரா புதுப்பிப்புகள் (நீண்ட நேர படப்பிடிப்பிற்கான ஆயுள்) என்பனவும் காணப்படுகிறது.

iPhone 13 vs. iPhone 11, 11 Pro

ஐபோன் 11 பொறுத்தவரையில் இரண்டு ஆண்டுகள் மாத்திரமே பழமை வாய்ந்ததாக காணப்படுகின்றது.இது பெரும்பாலான பாவனையாளர்களுக்கு சீரான சேவையையும் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டே இருக்கின்றது.ஐபோன் 11 பொருத்தவரையில் ஐபோன் 13 ஐ விட தொழில்நுட்ப பண்பில் 5G க்கான ஆதரவு இல்லாமையும், கேமராவின் அமைப்பிலும் இது வேறுபடுகின்றது.

iPhone 13 vs. iPhone XS, XS Max, XR

2018ம் ஆண்டு வெளிவந்த iPhone XS இன் தலைமுறை ஐபோன்கள் 3 வருடங்களை கடந்து உள்ளதால் அதை iPhone 13 ற்கு மாற்றீடு செய்வது நல்லது. காரணம் மூன்று வருடங்கள் கடந்து உள்ளதால் அது அதன் செயற்பாடுகளை மந்தநிலையில் மேற்கொள்ளக் கூடும்.மேலும் இது குறுகிய பற்றரி ஆயுளையும் கொண்டுள்ளதுடன் Night mood, அதிக தெளிவுத்திறன் கொண்ட செல்பி கேமராக்கள் போன்ற அம்சங்களையும் கொண்டதும் அல்ல.

iPhone 13 vs. iPhone X

நீங்கள் iPhone X பாவனையாளராக இருந்தால் நீங்கள் iPhone 13 க்கு மாறுவதை நாம் சிறந்தது என்கின்றோம். காரணம் இந்த போன் 2017 இல் வெளியிடப்பட்டதுடன் இதன் வேகம், பற்றரியின் கொள்ளளவு, கேமரா போன்ற அம்சங்கள் ஐபோன் 13 விட பெரிய அளவில் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது.

iPhone 13 vs. iPhone 8, 8 Plus

ஐபோன் 8 ஆனது ஆப்பிளின் தனித்துவ முதன் மரபுரிமை வடிவமைப்பைக் கொண்டது. ஐபோன் 8 பாவனையாளர்கள் ஐபோன் 13 க்கு மாறுவதற்கான பல காரணங்கள் உள்ளன. ஐபோன் 8 செயலி மிகவும் பழமை வாய்ந்ததாகவும், காலாவதியான கேமராக்களையும் கொண்டதாகவும் Night mood போன்ற சிறப்பம்சங்களையும் கொண்டிராதவையாகவும் காணப்படுகிறது.இதன் கேமராக்களில் ஒரு லென்ஸ் மாத்திரமே உள்ளதுடன் இதன் பற்றரி ஆயுட்காலமும் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் இவற்றில் 5Gக்கான ஆதரவும் இல்லை.

iPhone 13 vs. iPhone 7, 7 Plus

இது வெளிவந்து 5 ஆண்டுகள் ஆகின்றது. ஆதலால் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களிலும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதனால் ஐபோன் 7 பாவனையாளர்கள் ஐபோன் 13 மாறுவதே சிறந்த தீர்வு ஆகும்.

What do you think?

Written by Rifdhy Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

Apple dusks the 256GB iPhone SE | iPhone SE 256GB

தொலைபேசி சந்தையை பிரமிக்க வரும் புதிய Oppo Smartphone : சில நிமிடங்களில் Full Charge