in

iPhone 13 Mini |Apple’s last smaller-sized premium iPhone | In Tamil

iPhone இன் இறுதி சிறிய smartphone

Apple இன் சிறிய அளவிலான தொலைபேசிகளை விரும்புபவர்களுக்கு ஆப்பிள் தனது iPhone 13 தயாரிப்பு வரிசையில் புதியதாக iPhone 13 mini ஐ அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு ஆப்பிள் iPhone 14 mini வெளியிடுவதற்கான எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லை. ஏனெனில் iPhone 12 mini இன் விற்பனையானது எதிர்பார்த்த அளவு சந்தையில் விற்பனையாகவில்லை. IPhone 13 mini ஆனது ஐபோனின் கடைசி சிறிய அளவிலான வெளியீடாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் IPhone 12 mini இன் பொகட் (Pocket) போன்ற இலகு தன்மை அமைப்பும், உயர்ந்த Notch, கேமராக்கள் (Cameras), 5G தொழில்நுட்பம் காரணமாக இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) பல பாராட்டுகளையும் ஐபோன் (iPhone) பாவனையாளர் மத்தியில் பெரிதும் பெற்றது. ஆனால் iPhone 12 mini ஆனது $100 இலும் குறைவாக விற்கப்பட்டது. எனினும் IPhone 12 mini சந்தையில் இருந்து காணாமல் போய்விட்டதாகவும் பலருக்கு இன்று உணரக்கிடைக்கின்றது. இது $700 இல் விற்பதற்கு உரிய ஓர் பட்ஜெட் தொலைபேசியும் அல்ல. காரணம் குறிப்பாக IPhone SE மற்றும் IPhone 11 போன்ற தொலைபேசிகள் இதனைவிட மலிவான விலையில் கிடைக்கப் பெறுவதாகும். பெரிய அளவிலான ஐபோன்களில் விலையை ஐபோன் மினி (IPhone mini) ஸ்மார்ட்போன் ஆனது சார்ந்திருப்பதனால் இன்றைய காலகட்டத்தில் ஐபோனின் மினி (iPhone mini) தொலைபேசி ஆனது பெரிதும் மக்களிடையே வரவேற்பை பெற வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அத்துடன் Nikkei Asian Review எனும் பிரபல தொழில்நுட்ப வலையத்தள அறிக்கையில் அடுத்த ஆண்டு iPhone 14 mini ஐ அறிமுகப்படுத்த Apple நிறுவனம் திட்டமிடவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் தொழில்துறை ஆராய்ச்சியாளரான Ming-chi kuo வின் ஏப்ரல் மாத அறிக்கையிலும் Apple இன் 2022ஆம் ஆண்டு தரவரிசையில் IPhone mini தொடர்ச்சியாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.

தகவல்களின்படி ஆப்பிளின் முதன்மை தரவரிசையில் இருந்து ஐபோன் மினி (iPhone) அகற்றப்படுவது உறுதியாகியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் ஆப்பிள் தனது பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget Smartphone) தயாரிப்பு முயற்சிகளை IPhone SE இல் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளது. அத்துடன் 5G தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய IPhone SE 3 Model ஆனது IPhone 11 இன் அதே சிப் (Chip) மற்றும் 4.7inch LCD திரையுடன் 2022ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளிவரலாம் என பிரபல தொழில்நுட்ப ஆராய்ச்சி சம்பந்தமான வலைத்தளங்கள் குறிப்பிடுகின்றன.

What do you think?

Written by Rifdhy Ahmed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

Windows 11 release date: Here’s when Microsoft’s new OS comes out

Nokia’s 5G smartphone at an affordable price | Nokia G50 |In Tamil