in

Introduction and History of Arduino in Tamil

Arduino என்பது இலத்திரணியல் மற்றும் கணினி துறையில் விசேட பயிற்சி உடையவர்கள் மாத்திரம் பயன்படுத்திக் கொண்டிருந்த நுண் கட்டுப்படுத்தி தொழில்நுட்பத்தினை (Microcontroller Programming Technology) வயதெல்லை இன்றி யார் வேண்டுமானாலும் இலகுவில் கட்டு பொழுதுபோக்காகவும் அன்றாட வாழ்க்கையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இலத்திரனியல் மற்றும் கணினி குறிமுறை (Computer Programming) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இலகு படுத்துவதற்காக நிர்மாணிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.

Arduino

இன் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் அனைத்து விதமான நுண் கட்டுப்படுத்தி பலகைகளும் (Arduino Boards) அனைத்தும் சிறுவர்கள் முதல் அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தான் காரணமா பல நாட்டு மக்கள் மத்தியிலும் பாடசாலைகள் பல்கலைக்கழகங்களிலும் இது அமோக வரவேற்பைப் பெற்று மிகச்சிறிய காலத்தில் மிகவும் பிரபல்யமான நுண் கட்டுப்படுத்தி தொழில்நுட்ப நிறுவனம் ஆக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி இனி ஒரு ஒளிரும் இருவாயி ஒளிர்வது (LED blinking) தொடக்கம் தானியங்கி இயந்திரங்கள் மற்றும் சிக்கலான உபகரணங்கள் வரைக்கும் அனைத்து இலத்திரனியல் தொடர்புடைய வேலைகளையும் செய்து கொள்ளமுடியும்.

அத்துடன் இந்த நிறுவனத்தின் நுன் கட்டுப்படுத்தி பலகைகள் முதல் அதனை செயல்முறை படுத்த பயன்படுத்தப்படும் Arduino IDE மென்பொருள் வரை அனைத்தும் திறந்த மூல மேடையாக (open source platform) காணப்படுவதனால் இதனை பயன்படுத்தும் பயனர்களுக்கு தங்கள் தேவைக்கு ஏற்றவாறு இதில் மாற்றங்களை மேற்கொள்ளவும் Arduino நுண் கட்டுப்படுத்தி யுடன் பயன்படுத்தக்கூடிய உணரிகளையும் (sensor) துணை சுற்றுக்களையும் (modules) தயார் செய்து கொள்ளவும் உதவியாக காணப்படுகின்றது.

இது திறந்த மூல மேடையாக காணப்படுவதன் காரணமாக இருப்பதனால் பல நிறுவனங்கள் இந்த ஆர்டினோ பலகைகளையும் உணரி களையும் துணை சுற்றுக்களையும் மிக குறைந்த விலையில் உருவாக்கிய விற்பனை செய்கின்றனர்.

ஆர்டுயீனோ நிறுவனத்தின் வரலாறு

19ம் ஆண்டு காலப்பகுதியில் உலகில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் நுண் கட்டுப்படுத்தி தொழில்நுட்பம் மிகவும் பிரபலமாக கற்பிக்கப்பட்ட கொண்டிருந்தது. அந்த காலத்தில் நுண் கட்டுப்படுத்திகளின் விலை 50$ அதிகமாகவும் காணப்பட்டது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் சாதாரண மாணவர்களுக்கு அதனைக் கொள்வனவு செய்து கற்பது என்பது மிகவும் கடினமான விடயமாக காணப்பட்டிருந்தது. இதன் காரணமாக 2003 அளவில் இத்தாலி நாட்டில் காணப்படும் Interaction Design Institute Ivrea (IDII) பல்கலைக்கழக மாணவர்களினால் மைக்ரோ கண்ட்ரோலர் இன் விலையை குறைத்து மிக இலகுவாக அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் புதிய மைக்ரோ கண்ட்ரோலர் தொகுதியினை உருவாக்கும் நோக்கில் ஆடினோம் செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இது பல கட்டங்களில் மூலம் பலரின் உள்ளீடு களினால் மேம்படுத்தப்பட்டு 2015ஆம் ஆண்டளவில் முழுமை அடைய பட்ட ஒரு நுண் கட்டுப்படுத்தி தொகுதியாக சந்தைக்கு விநியோகிக்கப்பட்டது. இந் நிறுவனமானது தங்களுடைய அனைத்து நடவடிக்கைகளையும் திறந்த முறையில் பேணுவதன் காரணமாக பலரும் இவர்களின் கட்டுப்படுத்தி தொகுதிகளையும் இன்னும் விலை குறைவாக நிர்மாணிக்க சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பான காணப்பட்டது.

இந்த நிறுவனமானது நிறுவனத்திற்கு தேவையான வருவாய் பயனர்களின் நன்கொடைகள் மூலமாகவும் பல்கலைக்கழக செயலர்களின் மூலமாகவும் தங்களுடைய ஆர்டினோ பலகையில் ஒரிஜினல் வடிவத்தின் மூலமாகவும் தீட்டிக் கொண்டிருந்தனர். தற்காலத்தில் பொருத்தமட்டில் சீனா நாட்டின் பல நிறுவனங்களிலும் ஆல் டினோ பலகைகள் உருவாக்கப் படுவதன் காரணமாக ஆர்டினோ நிறுவனமானது உங்களுடைய வருவாயை மேம்படுத்துவதற்காக ஆர்டினோ சிறப்பு தொகுதி Arduino Pro இன்னும் புதிய தொகுதியினை அறிமுகம் செய்துள்ளது. இத்தொகுதியில் இணையத்துடன் தொடர்பு படுத்தி வேலை செய்யக்கூடிய உயர்ரக நுண் கட்டுப்படுத்தி களையும் இணைய உலாவி பயன்படுத்தக்கூடிய ஆடினோ செயல் முறைப்படுத்தல் மென்பொருளையும் உள்ளடக்கியதாகும்.

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

How to Learn Arduino Quick Guide in Tamil

Learn Microcontroller and deference in Tamil