in

What is Arduino And How to Learn in Tamil

ஆர்டுயீனோ (Arduino) என்பது ஒரு கட்டற்ற மூல  (திறந்த மூலநிரல்) அச்சுத் தயாரிப்பு மேடை ஆகும். இதை வன்பொருள் மற்றும் மென்பொருளுடன் எளிதாக உபயோகப்படுத்தலாம். இந்த தயாரிப்பு மேடையானது, ஒரு சிறிய, கைக்கடக்கமான கருவியாக கிடைக்கிறது. இந்த கருவியானது, அனைத்து வகையான உணரிகளிடமிருந்து உள்ளீடுகளை பெறக்கூடியது. இதன் வெளியீடுகள், பல்வேறு இயக்கிகளை இயக்கவல்லது. இந்த கருவியில், நமது விருப்பத்திற்கேற்ப மென்பொருள் வடிவமைக்க வசதியும், கட்டற்ற மென்பொருளும் உள்ளது.

Arduino Uno with Led
Arduino Uno with Led

Arduino என்பது பல வருடங்களுக்கு முன்பு இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலைக் கழகத்தின் மூலம் மாணவர்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டது. இது பிற்காலத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஆகவே உருவாகியது. ஆனாலும் இது வணிக நோக்கமற்ற நிறுவனமாக காணப்படுவதுடன் இதன் நிதித் தேவைக்காக பயனர்களின் நிதியுதவியுடன் மற்றும் சில விசேட சேவைகளையும் வழங்குகிறது. திறந்த மூல தொகுதியாக காணப்படுவதனால் இந்த நிறுவனத்தின் அனைத்து சுற்றுக்களையும் இணையத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடிகிறது.

இதன் காரணமாக பலரும் Arduino பயன்படுத்தக்கூடிய பலவிதமான சொத்துக்களை நிர்மாணித்து ஆகக் குறைந்த விலையில் விற்பனையும் செய்கிறார்கள். உண்மையில் இத்தாலி நாட்டில் தயாரிக்கப்படும் இந்த பலகையின் விலை சாதாரணமாக காணப்படும் ஆர்டினோ பலகையின் விலையை விட 5 மடங்கு கூடுதலாகும். நாம் சாதாரணமாக பயன்படுத்தும் Arduino பலகைகள் அனைத்தும் சீனாவில் காணப்படும் சிறு நிறுவனங்களின் மூலம் தயாரிக்கப்படும் பலகைகளை. இருந்தும் இவை செயல்திறன்மிக்க காணப்படுவதற்கான மிக முக்கிய காரணம் இவை திறந்த மூல தன்மையை கொண்டுள்ளதால் ஆகும்.

இந்த Arduino பல கையானது சிறுவர்கள் முதல் பெரியோர் வரை மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது அனைவரும் இதனை விரும்பி கற்று பயன்பெறுகின்றனர். இதனைப் பயன்படுத்தி எங்களுக்கு பல்வேறு விதமான இலத்திரனியல் உபகரணங்களை நிர்மாணித்து தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். சிறுவர்கள் பொழுதுபோக்கிற்காக இதனை கற்றுக் கொண்டாலும் இது அவர்களின் தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க திறனே மேம்படுத்துவதன் காரணமாக அவர்கள் இதன் மூலம் பல பயன்களை அடைகின்றனர். மற்றும் இது அனைத்து துறைகளில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பிரபலமாக அனைவரிடத்திலும் பேசப்படுகின்றது.

இந்த நிறுவனம் தற்பொழுது புதிய வகையான பலகைகளையும் நிர்வாகித்து கொண்டு வருகின்றது. அந்தப் பலகைகளை பயன்படுத்திய இணையத்துடன் தொடர்புபட்ட இலத்திரனியல் மின்னியல் உபகரணங்களை உருவாக்கிக்கொள்ள முடியாது. அத்துடன் இந்நிறுவனத்தின் மூலமே வழங்கப்படும் ஒன்லைன் programming முறை பயன்படுத்திய சிறப்பாக திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமன்றி இதனை உரிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் நாளாந்த வாழ்க்கையில் காணப்படும் பலவித பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இதைப் பற்றி உங்களுக்கு இலகுவாக இணையம் வாயிலாக கற்றுக் கொள்ள முடிகிறது.

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

How to Learn Arduino Quick Guide in Tamil